ஆன்மநேய அன்பர்களே!
ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 34ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன.
இவ்வாண்டு திருமந்திர முற்றோதல் ஐந்தாம் சுற்றாகவும் அதிலும் நான்காம் (4) தந்திரம் முற்றோதல் செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்ச்சி நிரல்: அழைப்பிதழ் இணைத்துள்ளேன். Download PDF
விழாவின் முக்கிய நிகழ்வுகள்:
1. 4–ஆம் தந்திர முற்றோதல்
2. திருமந்திரம் – நான்காம் தந்திரம் கருத்தரங்கம்
3. திருமந்திர சக்கரங்கள் உருவாக்க அரங்கம்
4. திருமுறை இசைஅரங்கம்
5. பள்ளி சிறுவர்கட்கு திருமந்திர மனன போட்டி பரிசரங்கம்
6. திருமந்திர தமிழிசை அரங்கம்
7. விருதரங்கம்
நாளும் நேரமும்:
25-12-2024 ; அறிவன் (புதன்) கிழமை, காலை 8:00 மணி முதல் மாலை 8.00 மணி வரை
இடம்:
SRM கலையரங்கம் (ஆடிடோரியம்), B9, வடபழனி, சென்னை 600026
திருமந்திரத் தமிழில் தோய்ந்து அருள்நலம் பெற அனைவரும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கின்றோம்!!
அனைவரும் வருக ! அருள்நலம் பெறுக!!.
இங்ஙனம்
சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம்
தெய்வத்தமிழ் அறக்கட்டளை
திருமுறை பாதுகாப்பு சங்கம்
செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை
வேண்டுகோள்: தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள ஆர்வமிக்க அன்பர்களுக்கு தெரிவித்து அழைத்து வரவேண்டுகிறோம்.
https://maps.app.goo.gl/gLJmEivXkKFuGbnB7