
இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!
“மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்”
என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான “இன்பத்துப்பால்” இரண்டு பகுதிகளாக களவியல் மற்றும் கற்பியல் என வகுக்கப்பட்டுள்ளது. இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை முதலான சங்க இலக்கியங்கள் இன்பத்தமிழ் வேதத்திற்குரிய நூல்கள்.