தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம், தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பின் ஐந்தாம் குழாம் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்வதற்கு உரிய இந்தப் பயிற்சி வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்

24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் -    ஒளிக்காட்சிகள் விழா அழைப்பிதழ் 24nd year - Thirumanthiram Recital A ONE DAY PROGRAM - SEVEN sittings December 25th 2014 - Thursday - 7am to 7pm Venue :: Chandrasekhar Thirumana Mandapam No 34, Ellaiamman Koil Street, West Mambalam, (Nearby Srinivasa theatre) Chennai - 600033 Program Highlights :: * A Yearly Event – 2014 is 24th year * This

முழுமுதற் கடவுள் விவாதம் – செய்திகள்

உ செய்தி 1  ‘ஓசையின் ஆன்மிகம்’ என்ற மலேசிய இதழில் ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்னும் தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின் ஓர் ஐயத்திற்கு விடையளித்திருந்தார். இதில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், சிவனே பரம்பொருள் என்றும் உமையம்மை, விநாயகன், முருகன் ஆகியோர் சிறுதெய்வங்களே என்றும் சாதித்திருந்தார். இதனால் மலேசியாவில் இருக்கும் அன்பர்கள் மனதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.        இந்தச்

ஐயன் காண்! குமரன் காண்! ஆதியான் காண்!

உ முருகா சிந்தனைப் பட்டறை - செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்      காற்றில் மிதந்து ககனத்தில் உலா வந்து ஈற்றில் நம் கையில் வந்து விழுந்தது ஓர் ஓலை. பிரித்துப் பார்த்தால் அது மலேசியாவில் இருந்து வந்த ஓர் இதழின் ஒரு பக்கம். இதழின் பெயர் ‘ஓசையின் ஆன்மிகம்’. ‘ஐயம் தெளிக’ 167 / 12-8-2014 என்ற தலைப்பில் சிவத்தமிழ்ச் செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள், க.சிவபாலன் / கிள்ளான் என்ற அன்பரின்

சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சிற்றம்பல அன்பர்: ஐயா! நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை! இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக் கிடந்தது. இப்போது தெளிந்து வந்திருக்கிறோம். சங்கர

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

  - தொடர்ச்சி முருகப் பெருமான்: அப்பா! தவிர்க்க முடியாதபடி இடைவேளை நீண்டுவிட்டது இல்லையா! சிவபெருமான்: ஆம், மகனே! இருபெரும் அடியார்கள்; ஒருவர்க்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தார்கள்; அவர்களைத் தொடர்புபடுத்தச் சென்று வந்தேன்; அதனால் இடைவேளை அமைந்து, அது நீண்டும் விட்டது. சரி, வட உபநிடதங்கள் மற்றும் வேத வேள்விகள் எல்லாம் எம்மை மறைப்பவை; அதில் யாம் உறைந்திருந்தாலும், யாம் அதில் மறைந்திருக்கின்றோம்; உண்மையில் சொல்லப் போனால் உபநிடதங்கள் எம்மை அரைகுறையாக அடையாளம் காட்டுபவை; வேத

அருணகிரி நாதர் (பகுதி 2)

- தொடர்ச்சி அருணகிரி நாதர்     அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், ‘அருணகிரி நாதர் வரலாறும் ஆராய்ச்சியும்’ என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைத்ததைப் பார்த்தோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப் மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில தகவல்களைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான ‘செந்தமிழ்’ என்ற இதழில்

அற்ற குளத்தில் . . .

           அறத்தமிழ் வேதம் - மூதுரை        - தொடர்ச்சி அருந்தமிழ்ச் செல்வங்களே! இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள்! அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. செல்வங்களே! இந்தப் பாடல் மிகமிக முக்கியமான பண்பாட்டைப் பதிய வைக்கிற பாடல். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும் பாடல் இது. நாம் என்ன செய்கிறோம்? ஒரு சிலரோடு பழகுகிறோம்;

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்     ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே!’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா! அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்

தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு

திரு.இராமசாமி நினைவுப்(SRM) பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும்  & தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் தமிழ் அருட்சுனைஞர் பட்டய வகுப்பு நான்காம் குழாம் (IV Batch) தொடக்க விழா நாள்: 24-05-2014 காரிக்கிழமை (சனி) காலை 9.00 மணி இடம்: எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகம், 100 அடி சாலை, போக்குவரவு குறிகாட்டி அருகில், வடபழனி, சென்னை – 600026. செந்தமிழ்ச் செல்வப் பெருந்தகையீர்! வணக்கம். வராது வந்த மாமணி போல பலரும் பாராட்ட வந்த பட்டயப் படிப்பு தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு.

Top