You are here
Home > 2014 > August

சைவக் கேள்விச் சிற்றம்பலம்

சிற்றம்பல அன்பர்: ஐயா! நாங்கள் சில மாதங்கள் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து விட்டோம். அதனால் கேள்விச் சிற்றம்பலத்தில் இடைவேளை நீண்டு விட்டது. நல்ல வேளை! இறைவன் திருவருளால் மீண்டும் சிற்றம்பலம் இன்று கூடி இருக்கிறது. இதற்கு முந்தைய கூட்டத்தில் மாயாவாதம் எனப்படும் சங்கர வேதாந்தத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினோம். பின்னர் சில மாதங்கள் மாயாவாதத்தின் மயக்கமோ என்னவோ சில மாதங்கள் சிற்றம்பலம் மயங்கிக் கிடந்தது. இப்போது தெளிந்து வந்திருக்கிறோம். சங்கர

சர்வ ஞான உத்தர ஆகமம் – தமிழில்

  - தொடர்ச்சி முருகப் பெருமான்: அப்பா! தவிர்க்க முடியாதபடி இடைவேளை நீண்டுவிட்டது இல்லையா! சிவபெருமான்: ஆம், மகனே! இருபெரும் அடியார்கள்; ஒருவர்க்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தார்கள்; அவர்களைத் தொடர்புபடுத்தச் சென்று வந்தேன்; அதனால் இடைவேளை அமைந்து, அது நீண்டும் விட்டது. சரி, வட உபநிடதங்கள் மற்றும் வேத வேள்விகள் எல்லாம் எம்மை மறைப்பவை; அதில் யாம் உறைந்திருந்தாலும், யாம் அதில் மறைந்திருக்கின்றோம்; உண்மையில் சொல்லப் போனால் உபநிடதங்கள் எம்மை அரைகுறையாக அடையாளம் காட்டுபவை; வேத

அருணகிரி நாதர் (பகுதி 2)

- தொடர்ச்சி அருணகிரி நாதர்     அருணகிரி நாதரின் வரலாறு பற்றி சரிவரத் தகவல்கள் பதிவாகவில்லை என்று தணிகைமணி வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், ‘அருணகிரி நாதர் வரலாறும் ஆராய்ச்சியும்’ என்ற தமது நூலில் ஏக்கத்துடன் எடுத்துரைத்ததைப் பார்த்தோம். ஆனால் சேதுபதி அரசர் நடத்திய நான்காம் தமிழ்ச் சங்கத் தலைமைப் புலவராய் வீற்றிருந்த மூதறிஞர் ராவ்சாகிப் மு.இராகவையங்கார் அவர்கள் அரிதில் முயன்று சில தகவல்களைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான ‘செந்தமிழ்’ என்ற இதழில்

அற்ற குளத்தில் . . .

           அறத்தமிழ் வேதம் - மூதுரை        - தொடர்ச்சி அருந்தமிழ்ச் செல்வங்களே! இன்று நாம் பார்க்க இருக்கிற பாடல் 17-ஆவது பாடல். பாடலைக் கேளுங்கள்! அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. செல்வங்களே! இந்தப் பாடல் மிகமிக முக்கியமான பண்பாட்டைப் பதிய வைக்கிற பாடல். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும் பாடல் இது. நாம் என்ன செய்கிறோம்? ஒரு சிலரோடு பழகுகிறோம்;

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்

மார்க்கண்டேய கட்ஜீவின் மாய்மால மார்க்கம்     ‘மார்க்கண்டேய கட்ஜீவைத் தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டே நம் பவனிப் புலவர் உள்ளே வந்தார். ‘மார்க்கண்டேயரை நன்றாகத் தெரியும். எமனையே ஏப்பம் விட்டவராயிற்றே!’ என்றேன். ‘மார்க்கண்டேயர் இல்லை ஐயா! அவரை எனக்கும் தெரியும். என் ஆயுளைப் பற்றி சோதிடர்கள் சிலவற்றைக் கூறி இருக்கிறார்கள். அது பற்றி வாய்ப்பு வந்தால் மார்க்கண்டேயரைச் சந்தித்துக் கலந்தாலோசனை செய்து சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்

Top