You are here
Home > 2014 > January

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்

நின்றவூர் பூசலாரும் நீதி நின்றிடாப் பூசலாரும்                       ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் (21-01-2014) புரட்டிக் கொண்டே வந்தேன். என்னையா புரட்கிறாய் என்று அந்த நாளிதழ்க்கு என் மேல் கோபம் வந்து விட்டது போலும்! அதிலிருந்த ஒரு செய்தி என்னைப் புரட்டிப் போட்டு விட்டது. தலைப்பு இது தான்: ‘அமைச்சர் வருமுன் குடமுழுக்கு; சிவாச்சாரியார் பணியிடை நீக்கம்!’ செய்தி இது தான்: “புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றியாண்டவர் கோயிலில்

அடக்கம் உடையார் – மூதுரை – இளம்பூரணன்

குழந்தைகளே! இன்று நாம் பார்க்கும் மூதுரைப் பாடல் இதோ! அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. இந்தப் பாடலில் கூறப்படும் செய்தி நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது. அதாவது அறிவும் ஆற்றலும் உடைய பெரியவர்கள் எப்போதும் அடக்கமாய் இருப்பார்கள்; ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். அரைகுறை அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் தான் துள்ளுவார்கள். குடம் முழுதும் நீர் இருக்குமானால் தளும்பாது; குடத்தில் பாதி

சைவக் கேள்விச் சிற்றம்பலம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்

சிற்றம்பல அன்பர்: ஐயா! இடையிலே தாங்கள் வெளியூர் சென்றுவிட்டீர்கள்! எனவே சிற்றம்பலம் வெற்றம்பலமாக இங்கே வெறிச்சோடி இருந்தது. இப்போது தாங்கள் வந்தவுடன் சிற்றம்பலம் களை கட்டி விட்டது. நாங்களும் சில சமயத் தத்துவங்களை நாங்களாகவே படித்து நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். எனவே இப்போது கேள்விக் கணைகளோடு காத்திருக்கிறோம். வழக்கம் போல் அன்பர்களுக்குப் பதிலியாக நானே கேள்விகளை முன் வைக்கிறேன். அறிவாகரர்: சுவையான உணவு படைக்கும் போது இடையில் இலையில் ஊறுகாயும் வைப்பார்கள்.

சேய்த்தொண்டர் புராணம் – அருணகிரிநாதர் – செந்தமிழ் மாருதன்

‘இளந்தமிழன் செழுங்கொண்டல் என உலகம் பரவும் எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன்’                                     - சேய்த்தொண்டத் தொகை முருகனடியார் என்றாலே நம் கண்முன் நிற்பவர் அருணகிரிநாதர் தான் என்பதை எல்லோரும் ஒப்புவர். இறைவனைப் புகழ்ந்து பாடுவது அனைத்துமே திருப்புகழ் தான். சுந்தரர் தாம் பாடிய பதிகங்களைத் திருப்புகழ் என்றே கூறினார். “தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே” என்பது அவரது வாக்கு. எனவே இறைவனைப் பாடியதெல்லாம் திருப்புகழ் என்றாலும் அது பொதுச்சொல்.

சர்வ ஞான உத்தர ஆகமம் – செந்தமிழ் வேள்விச் சதுரர்

முருகப்பெருமான்: தந்தையே! ஒரு சின்ன சந்தேகம்! சிவபெருமான்: நீ கேட்பதைக் கேள்! அது சின்னதா பெரிதா என்று நான் சொல்கிறேன்! முருகப்பெருமான்: அதுவும் சரி தான்! உயிர்கள் உடலோடு கூடி நிற்கும் போது ஆன்மாக்கள் எனப்படுகின்றன. உடலோடு கட்டுண்டு நிற்கும் ஆன்மாக்கள் உடல் போலவே தன்னை உணர்கிறது. ஆனால் உடலை விட்டு இறைவனோடு கூடி இரண்டற நிற்கும் போது தன்னை இறையெனவே உணர்கிறது. இது ஏன்? இதற்கு என்னவோ ஒரு தன்மை என்று

வள்ளிமலை படிவிழா – பவனிப்புலவன்

தமிழர் திருநாள் ஆசி பெறும் 3ஆம் ஆண்டு வள்ளிமலை மலைவலம் படிவிழா -  பவனிப்புலவன்          2014 சனவரி முதல் தேதி. மாலை 4 மணியளவில் அலைபேசி சிணுங்கியது. சைதாப்பேட்டை மின்தொடர் நிலையத்தில் என்னைக் காத்திருக்கும் படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் ச.மு.தி. என்பவர். யார் அவர்? தமிழ்நெறி பற்றிய உணர்வுகள் சமுத்திரம் போல் அவர் நெஞ்சத்தில் பொங்கிக் கொண்டிருக்கும். அதனால் தானோ என்னவோ அவருடைய பெயரின் முதலெழுத்துக்கள் இயற்கையாக அப்படி அமைந்திருக்கின்றன. அவர் தான் சென்னைப்

Top